பட்டர் சிக்கன்(சைனீஸ்)

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கனில் ஊற வைத்து பொரிக்க:
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கொதிக்க வைக்க:
டொமேடோ பேஸ்ட் டின் - 100 கிராம்
நெஸ்லே கிரீம் - அரை டின்
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி (தவ்வாவில் வறுத்தது)
உப்பு - அரை தேக்கரன்டி
சர்க்கரை - ஒரு பின்ச்
தாளிக்க:
பட்டர் - ஐம்பது கிராம்
பச்சை மிளகாய் - நான்கு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி


 

சிக்கனில் ஊற வைக்க வேண்டியவைகளை ஊறவைத்து பொரித்தெடுக்கவும்.
கொதிக்க வைக்க வேண்டியவைகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நல்ல கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்கவிட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.
இது ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.


மேலும் சில குறிப்புகள்