உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பிஸி பேளா பாத்

 


தேவையானப் பொருட்கள்

  • அரிசி - ஒரு டம்ளர் (வடித்து கொள்ளவும்)
  • வேகவைத்து கொள்ளவும்
  • ----------------------
  • துவரம் பருப்பு - முக்கால் கப்
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரன்டி
  • எண்ணை - ஒரு தேக்கரண்டி
  • வேர்கடலை - அரை கப் (வேகவைத்து கொள்ளவும்)
  • உப்பு - தாளிக்க
  • தாளிக்க
  • ---------
  • நெய் - இரண்டு மேசை கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கருவேப்பிலை - கொஞ்சம்
  • சின்ன வெங்காயம் - ஐந்து
  • பீன்ஸ் - ஐந்து
  • கேரட் - அரை (பொடியாக அரிந்தது)
  • தக்காளி - ஒன்று
  • பொடி தயாரிக்க
  • --------------
  • கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு மேசை கரண்டி
  • பொட்டு கடலை - ஒரு மேசை கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
  • தனியா - ஒரு மேசை கரண்டி
  • பெருங்காயம் - இரு சிறிய துண்டு
  • காஞ்ச மிளகாய் - ஐந்து
  • கிராம்பு - முன்று
  • பட்டை - ஒரு துண்டு
  • வெந்தயம் - கால் தேக்கரண்டி
  • கசகசா - கொஞ்சம்
  • ஏலகாய் - ஒன்று
  • நெய் - முன்று மேசை கரண்டி(கடைசியில் கலக்க)
  • புளி - ஒரு லெமென் சைஸ்

செய்முறை

  • பருப்பை மஞ்சள் பொடி,சேர்த்து வேகவைத்து மசித்து வைக்கவும்.
  • சதத்தை வடித்து வைக்கவும்.
  • வேர்கடலையயும் வேகவைட்து வைக்கவும்.
  • பொடி வகைகளை எண்ணையில் வதக்கி ஆறியதும் பொடித்து கொள்ளவேண்டும்.
  • நெயில் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய்ம்,கேரட்,பீன்ஸ்போட்டு வதக்கி,புளியை இரண்டு கப் தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றவும்,
  • பொடித்த பொடியும் போட்டு கொதிக்கவிடவும்.வெந்த வேர்கடலயையும் சேர்க்கவும்.
  • சாதம்,வெந்தபருப்பையும் சேர்த்து கிளறவும்.
  • நல்ல கிளறி கடைசியில் நெய்யையும் போட்டு கிளறவும்.

குறிப்பு:

இந்த பொடியை நிறைய திரித்து வைத்து பிரிட்ஜில் கொண்டால் தேவைக்கு உபயோகப்ப்படுத்தலாம்

வழங்கியவர்

ஜலீலா


comments