ப்ளைன் வெங்காய குழம்பு

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய வெங்காயம் -- 15
தக்காளி -- 2 (சிறிய அளவில்)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
சீரகம் -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1/2 கப்
தாளிக்க:
எண்ணைய் -- 1/4 கப்
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் எண்ணைய் கொஞ்சம் ஊற்றி சிறிய வெங்காயம் , போட்டு சிறிது வெந்தபின் தக்காளி போட்டு சீரகம்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின் சாம்பார் பொடி போட்டு கொஞ்சம் எண்ணைய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
மீதியுள்ள எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சிறியவெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை வாணலியில் ஊற்றவும்.பின் இதனுடன் உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 8 நிமிடம் வேகவைக்கவும்.
ப்ளைன் வெங்காய குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்