ராஜ்மா குழம்பு

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராஜ்மா -- ஒரு கப்
பட்டை -- ஒரு அங்குலம் அளவு
கிராம்பு -- 2 என்னம்
வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சாம்பார் பொடி -- 1 1 /2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
நல்லெண்ணைய் -- 1 ஸ்பூன்
தேங்காய் -- 1/4 மூடி


 

முதலில் ராஜ்மாவை இரவே ஊறவைக்கவேண்டும்.
பின் குக்கரில் 10 நிமிடம் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.
பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பார் பொடி சேர்த்து வதக்கி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த ராஜ்மாவை போடவும்.
பின் தேங்காயை அரைத்து கொதிக்கும் ராஜ்மா குழம்பில் ஊற்றி நல்லெண்ணைய் விட்டு 2 நிமிடம் ஆனதும் இறக்கி பறிமாறலாம்.
சூப்பர் ராஜ்மா குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

I often use ur recipe.....This one is the best...It takes just around 30 mins to do this tasty & healthy dish.

Thanks a lot.

~Anu.

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)