சிறுகிழங்கு மொச்சை பொரியல் | arusuvai


சிறுகிழங்கு மொச்சை பொரியல்

food image
வழங்கியவர் : saraswathi
தேதி : வெள்ளி, 11/01/2008 - 20:32
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • சிறுகிழங்கு - கால் கிலோ
 • பச்சைமொச்சை பயிறு - 100 கிராம்
 • தேங்காய் - 2 சில்
 • பச்சைமிளகாய் - 6
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • பூண்டு - 2 பல்
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • உப்பு - தேவையான அளவு

 

 • சிறுகிழங்கை ஒரு கோணியில் போட்டு தேய்த்தால் தோல் தனியே பிரிந்து வரும். அதை தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வேறு தண்ணீரில் கழுவி மொச்சையுடன் 2 கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக விடவும்.
 • நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும். தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
 • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வேகவைத்தவற்றையும், அரைத்ததையும் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.
இது பொங்கல் ஸ்பெஷல்.