வல்லாரை கீரை துவையல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வல்லாரைக் கீரை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - 8 பல்
நறுக்கிய தக்காளி - 2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 6
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கீரையை அலசி விட்டு ஆய்ந்து எடுத்து வதக்கி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, தக்காளியை தனித்தனியாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இவையனைத்தையும் அம்மியில் வைத்து புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்