பரங்கிக்காய் பொரிமா

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பரங்கிக்காய் - ஒரு பத்தை
வெங்காயம் - 10
வரமிளகாய் - 5
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கடலைப்பருப்பு, மிளகாய், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கி பரங்கிக்காயை பொடியாக நறுக்கி போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.
அதிலுள்ள தண்ணீரிலே வெந்து விடும். கடைசியாக வறுத்த தூளை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று பரங்கிக்காய் பொரிமா செய்தேன். சுவையாக இருந்தது.மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"