www.arusuvai.com
கோலி பஜே
தேவையானப் பொருட்கள்
- மைதா மாவு -- 1/4 கிலோ
- உளுத்தம் பருப்பு -- 10 கிராம்
- தயிர் -- 15 கிராம்
- சமையல் சோடா -- 2 சிட்டிகை
- பச்சை மிளகாய் -- 7 என்னம் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி -- ஒரு சிறிய துண்டு
- கறிவேப்பிலை -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )
- பெருங்காய கரைசல் -- 1/2 டீஸ்பூன்
- உப்பு -- ருசிக்கேற்ப
செய்முறை
- உளுத்தம் பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நன்றாக மை போல கெட்டியாக அரைக்கவும்.
- மைதாவுடன் உளுத்தம்பருப்பு மாவு, தயிர், சோடா, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். தேவை எனில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி காயவைத்து சாதாரணமாக போடும் போண்டாவை விட சிறியதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- கோலி பஜே ரெடி.
-
-