மோர் மிளகாய்

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மோர் -- 1 லிட்டர்
பச்சை மிளகாய் -- 1/2 கிலோ
உப்பு -- தேவையான அளவு


 

பச்சைமிளகாயை நன்றாக கழுவி காய வைத்து நடுவில் ஓட்டை போடவும்.
மோரை நன்றாக கடைந்து உப்பு சேர்க்கவும்.
ஓட்டை போட்ட பச்சை மிளகாயை மோரில் ஊறபோடவும்.
அதை அப்படியே நிழலில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும்.
மறுநாள் மிளகாயை எல்லாம் எடுத்து கம்பியில் கோர்த்து வைக்கவும்.
மோருடன் சிறிது புது மோர் சேர்த்து உப்பு போடவும்.
பின் கம்பியில் கோர்த்து பாதிநாள் வைத்திருந்த மிளகாயை மோரில் ஊறப்போடவும்.
இதை போலவே மோர் தீரும் வரை செய்யவும்.
புது மோர் ஒரு தடவை சேர்த்தால் போதும்.
அப்படியே மோர் முழுவதும் மிளகாயில் ஒட்டி வரும் வரை ஊறவைத்து அப்படியே காய வைத்து வத்தல் ஆகும் வரை வைக்கவும்.
காரமான மோர் மிளகாய் ரெடி.

இதை இரண்டிரண்டாக எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து மோர் சாதத்திற்கு சாப்பிட சூப்பராக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்