சுண்டவத்தல் குழம்பு

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுண்ட வத்தல் -- 15 என்னம்
சின்ன வெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி -- 1 டீஸ்பூன்
எண்ணை -- தாளிக்க
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சாம்பார் பொடி -- 1 1/2 ஸ்பூன்
புளி -- 1 கோலியளவு (கெட்டியாக கரைத்தது)
உப்பு -- ருசிக்கேற்ப
நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து கறிவேப்பிலை,வெங்காயத்தை போடவும்.
பின் பெருங்காயத்தூள், வெந்தயத்தூளை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து உப்பு போட்டு நன்கு பேஸ்ட் போல செய்யவும்.
சாம்பார் பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் புளி தண்ணீரை விடவும்.
பின் தாளிக்கும் கரண்டியில் நல்லெண்ணைய் 2 ஸ்பூன் விட்டு சுண்ட வத்தலை வறுத்து எண்ணையுடன் குழம்பில் கொட்டவும்.
மீதியுள்ள எண்ணையையும் சேர்க்கவும்.
குழம்பி நன்கு கொதித்து வற்றி எண்ணைய் மேலே மிதக்கும் வரை காய்ச்சவும்.
(வயிற்றில் உள்ள பூச்சி எல்லாம் சாகும் தன்மை சுண்டவத்தலுக்கு உள்ளது.)
சுவையான மருத்துவ குணம் உள்ள குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்