இனிப்பு சோமாஸ்

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாவு தயாரிக்க:
மைதா - ஒரு கப்
வறுத்த ரவை - கால் கப்
கார்ன்ஃப்ளார் மாவு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
பில்லிங் தயாரிக்க:
துருவிய தேங்காய் - கால் கப்
கருப்பு எள் - இரண்டு மேசைக்கரன்டி
கசகசா - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மைதா மாவில் குழைக்க வேண்டியவைளை சேர்த்து குழைத்து கொள்ளவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பூரி உருண்டைகளாக போடவும்.
பில்லிங் ரெடி செய்ய நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து கசகசா, எள், சர்க்கரை கலந்து எடுத்து வைக்கவும்.
பூரி உருண்டைகளை மைதாவில் சிறிது அரிசி மாவு கலந்து தேய்த்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து பில்லிங்கை ஒரு ஸ்பூன் உள்ளே வைத்து வெளியில் வராதவாறு அச்சை மூடவும். வெளியில் வந்தால் பொரிக்கும் போது அவ்வளவு பில்லிங்கும் வெளியில் வரும்.
அச்சு இல்லாதவர்கள் சிறிய பூரி மாதிரி உருட்டி விட்டு மைதா தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து ஒரத்தில் இந்த கலவையை ஒட்டி ஒரு சாவியை கொண்டு மூடும் இடத்தில் லைனாக குத்தி கொண்டே வர வேண்டும்
இப்போது எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இனிப்பு சோமாஸ் ரெடி. தேவைப்பட்டால் நட்ஸ் வகைகள் பொடித்து சேர்த்து கொள்லலாம்


இஸ்லாமிய இல்லங்களில் நோன்பில் மாலை நோன்பு திறக்கும் போது செய்யும் அயிட்டத்தில் இதுவும் ஒன்று.
இதை நிறைய செய்து ஒரு தட்டில் மாவு தடவி லைனாக அடுக்கி ஃப்ரீஜரில் வைத்து கெட்டியானதும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு முறை கவரில் போட்டு வைத்து கொண்டால் தேவைக்கு எடுத்து பொரித்து கொள்ளலாம். இனிப்பு சோமாஸ், கார சோமாஸ் குழந்தைகளுக்கு சும்மா உள்ள போய் கொண்டே இருக்கும். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம், மூன்று நாட்கள் வெளியில் வைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த பில்லிங்கில் பொட்டுக்கடலை சேர்க்கலாமா?

பொட்டு கடலை சேர்க்கலாம், சேர்த்தால் இன்னும் நல்ல கோட்டாகும். கிரிப் கிடைக்கும்.
மாவு குழைக்கும் போது பட்டர் + கொஞ்சம் எண்ணை சேர்த்து சூடு படுத்தி மாவில் கலந்து பிறகு தன்னீரில் சோடா மாவு உப்பு போட்டு கரைத்து குழையுங்கள் இன்றூ அப்படி தான் செய்தேன் ரொம்ப கிரிஸ்பியா இருந்தது,
ஜலீலா

Jaleelakamal