சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்)

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு: 3 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பழுத்த சப்போட்டா பழம் - ஐந்து
பால் - ஒரு கப்
ஐஸ் கட்டி - அரை கப்
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் - ஒரு குழிக்கரண்டி


 

சப்போட்டாவை தோலெடுத்து கொட்டைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி போடவும்.
ஐஸ் கட்டிகளை பொடித்துக் கொள்ளவும்.
இப்போது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நுரைக்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.


கோடை காலங்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வகை பழங்களில் ஜூஸ் குடிக்கலாம். சப்போட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சிக்கு ஜூஸ்

ஆமாம் கோதை ஜூஸ் ரொம்ப நல்ல இருக்கும்
இந்தங்க கோதை குடிங்க
இதில் ஐஸ்கிரீம் சேர்க்காமலும் அடித்து குடிக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் தாங்க்யூ கேட்டவுடனே போட்டு கொடுத்துட்டீங்களே. இத நிச்சயம் நாளைக்கே செய்து பார்க்க போறேன். thank u very much

கோதை எனக்கு இன்னைக்கே குடிக்கனும் போல இருக்கு
கடைக்கு போகிற நேரம் எல்லாம் முதலில் போய் பழுத்து இருக்கான்னுபார்த்துட்டு மீதி சாமான் களை பார்ப்பது

ஜலீலா

Jaleelakamal

ஆஹா இப்படி மாத்தி மாத்தி சிக்கு ஜூஸ் பத்தி பேசி அது மேல உள்ள ஆர்வம் அதிகமாயிடுச்சு, இப்பவே கடைக்கு போய் வாங்கிட்டு வந்து ஜூஸ் செய்துவேன் போல அவ்வளாவு ஆவல். சப்போட்டாக உடம்பு நல்ல ஆரோக்கியம் கூட இல்ல மேடம்.

ஆமாம் ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கும் நான் ஐஸ் க்ரீம் சேர்த்துவது இல்லை..குழந்தைகளுக்கும் ரொம்ப நல்லது சப்போட்டா.மாம்பழம் போலவே சப்போட்டாவும் ஜூஸ் அடிச்சா நல்ல கட்டியா கிடைக்கும்.சோகொலேட் ஷேக் போல இருக்கும்