ஆப்பிள் சூப் ( குழந்தைகளுக்கு)

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு: 3 kids

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - ஒன்று
உருளைக்கிழங்கு - அரை பாகம்
பால் - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி (அரை மணிநேரம் ஊறவைத்தது)
தண்ணீர் - இரண்டு கப்
கார்ன் ஃப்ளார் மாவு - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

ஆப்பிளை தோலெடுத்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கவும்.
இப்போது குக்கரில் நறுக்கிய ஆப்பிள் துண்டு, உருளைக்கிழங்கு, ஊறவைத்த பருப்பு முன்றையும் போட்டு ஒரு பின்ச் சால்ட் போட்டு நல்ல தீயை மிதமாக வைத்து வேகவிடவும்.
வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
தனியாக சட்டியில் பட்டரை உருக்கி மிக்ஸியில் அடித்த கலவையை ஊற்றி பாலில் கார்ன் ஃப்ளார் மாவை கரைத்து ஊற்றி தேவையான அளவுக்கு காரம் பார்த்து மிளகு தூள் சேர்த்து கொடுக்கவும்


மேலும் சில குறிப்புகள்