முட்டை, பட்டாணி, உருளை பொரியல்

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

முட்டை - 6
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 8
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது


 

பட்டாணியை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். பச்சை பட்டாணியாக இருந்தால் அப்படியே வேக வைக்கலாம்.
மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி, முட்டையை நன்கு அடித்து மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஆம்லெட் ஊற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வதக்கி பின் பட்டாணியை சேர்க்கவும்.
நன்கு வெந்தவுடன் முட்டை ஆம்லெட்டை போட்டு கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

very super