பரங்கிக்காய் புளிக்கறி

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பரங்கிக்காய் - ஒரு பத்தை
புளி - கோலிக்குண்டு அளவு
வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 3
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - மிளகு அளவு
உப்பு - தேவையான அளவு


 

வெந்தயத்தையும், பெருங்காயத்தையும் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து தூளாக்கவும். பரங்கிக்காயை லேசாகவும், 2 அங்குலம் நீளமாகவும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி பரங்கிக்காயை சேர்க்கவும்.
பிறகு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி புளியை 1/2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வற்றியவுடன் வறுத்து தூளாக்கியதை போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்