கிளங்கா மீன் ப்ரை( lady fish)

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு: 4 ,5 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கிளங்கா மீன் - பத்து துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 மேசைக்கரண்டி


 

மீனை கழுவி சுத்தம் செய்யவும்.
பச்சை மிளகாய், மிளகு, சீரகம் மூன்றையும் அரைக்கவும். அரைத்த கலவையில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு சிறிது தண்ணீரும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மீனில் இந்த மசாலாவை பிசறி பத்து நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இது திலாபியா மீன் வைத்து செய்தேன்.. ரொம்ப அருமையா வந்தது. வெஜிடபிள் பிரியாணியுடன் அருமை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா கிளங்கா மீன் பிரை பின்னூட்டத்துக்கு நன்றி
ஆகா வெஜ் பிரியாணியுடனா ம்ம்சூப்பர் தான்

ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா, நலமா? உங்க கிளங்கா மீன் ஃபிரை செய்தேன். சூப்பரா இருந்தது. என் மகளும், கணவரும் விரும்பி சாப்பிட்டாங்க. இனி இந்த ஃபிரை அடிக்கடி எங்க மெனுல்ல இருக்கும். ரொம்ப நல்ல சுவை.
நன்றி

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.