www.arusuvai.com
நூக்கல் சாம்பார்
தேவையானப் பொருட்கள்
- நூக்கல் -- 1 என்னம் (தோலை நீக்கி நறுக்கி வைக்கவும்)
- துவரம் பருப்பு -- 1/2 கப் (வேகவைத்தது)
- சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
- வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
- பெருங்காயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
- கடுகு,உளுத்தம் பருப்பு -- 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 1 இனுக்கு
- சின்னவெங்காயம் -- 10 என்னம் (வட்டமாக நறுக்கியது)
- தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
- புளி -- 1 கோலியளவு (நீரில் கரைத்தது)
- உப்பு --ருசிக்கேற்ப
செய்முறை
-
-
- வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
- பின் வெங்காயத்தைபோட்டு ஒரு வதக்கு வதக்கி பெருங்காயப்பொடி, வெந்தயப் பொடி போட்டு ஒரு வதக்கு வதக்கி தக்காளி,உப்பு போட்டு நன்கு வதக்கி நூக்கலை போடவும்.
- 4 நிமிடம் நன்கு வதக்கி சாம்பார் பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதுக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் துவரம் பருப்பு, புளி தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
- கொதித்து குழம்பு வற்றும் வரை சிம்மில் வைத்து பின் பறிமாறலாம்.
- நூக்கல் சாம்பார் ரெடி.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-