குழந்தைகள் கீரை சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு கீரையை வடையாகவோ,சூப்ப்பாகவோ இந்த புளிகடைசலாகவோ கொடுக்கலாம்
தேவையானப் பொருட்கள்
- வதக்கி அரைக்க
- -------------
- எண்ணை - ஒரு தேக்கரன்டி
- பாலக் கீரை - ஒரு கட்டு
- வெங்காயம் - ஒன்று
- தக்காலி - அரை
- மிளகாய் தூள்- கால் தேகரண்டி
- உப்பு - அரை தேகரண்டி
- தனியாதூள் - கால் தேக்கரண்டி
- பச்ச மிளகாய் -ஒன்று
- புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு(கரைத்து கொள்ளவும்)
- துவரம் பருப்பு - கால் கப்(வேகவைத்து கொள்ளவும்)
- தாளிக்க
- ---------
- நெய் - இரன்டு தேக்க்ரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேகரண்டி
- கருவேப்பிலை - இரன்டு ஆர்க்
செய்முறை
- ஒரு தேக்கரன்டி எண்ணையில் வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறியதும் அரைக்கவும்.
- அதில் புளியை கரத்திஊற்றி கொதிக்கவிடவும்.
- வெந்தபருப்பையும் சேர்க்கவும்.
- கடைசீயில் தாளிக்க கொடுத்துள்ளவைகலை தாளித்து சேர்க்கவும்.
- .
-
குறிப்பு
ஒரு வயது குழந்தை முதல் கொண்டு இதை தரலாம் ஆனால் காரம் குறைத்து கொல்ளவும். நெய் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம்.
எந்த பருப்பு வேண்டுமானாலும் போடலாம்,எந்தகீரை வேண்டுமாலும் போடலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 person |
5 min |
10 min |