வெண்பொங்கல் சாம்பார்

வெண்பொங்கலுக்கு எந்த சாம்பார் நன்றாக இருக்கும் என்று கூறுங்கள் தோழிகளே?ரெசிபி பிளீஸ்.....

அன்புடன்
திவ்யா அருண்

ஹாய் திவ்யா உங்களுக்கு யாராவது பதில் சொல்லுவங்கனு பார்கிறேன்... எனக்கும் இதற்கு பதில் வேண்டும் ..
நீங்க சொல்லும் வெண் பொங்கல் வெறும் பச்சரிசி குழைய வடிப்பது என்றால் ..
நான் நாளை நூல்கோல் அல்லது சௌ சௌ சாம்பார் வைக்கலாம் என்று இருக்கேன் ..இங்க வேற நல்ல ஐடியா சொன்னாலும் ஓகே ...
உங்க ஐடியா வையும் சொல்லுங்கா . மத்தவங்க சொல்றவரைக்கும் நாம பேசலாம் .

ஹாய் பாலாமு,
எப்படி இருக்கீங்க?நான் வெண் பொங்கல் மிளகு,சீரகம்,முந்திரி,பாசி பருப்பு எல்லாம் சேர்த்து தான் செய்வேன்.நான் பாசி பருப்பு சாம்பார்,வெள்ள பூசணி சாம்பார்,தேங்காய் சட்னி செய்வேன்.இங்கு நம் தோழிகள் சரியான அசத்தல் ஜோடி சொல்வாங்கனு தான் கேட்டேன்.எந்த எந்த சாம்பார் பொருத்தமா இருக்கும்னு சொன்னா பரவாயில்லை.

நம்ம செல்வி அக்கா,ஜெயந்தி மாமி,மனோகரி மேடம்,ஜலீலா அக்கா,யாருமே இந்த பதிவை இன்னும் பார்க்கலை போலிருக்கு.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இது செய்வது ரொம்ப சுலபம் ! வெண்பொங்கலுக்கு நல்லா இருக்கும். கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி தாளித்து அதனுடன் துவரம் பருப்பு,சாம்பர் பொடி,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்தால் சாம்பார் ரெடி !
என்றும் அன்புடன்,
பாத்திமா உஷானா.

என்றும் அன்புடன்,
பாத்திமா உஷானா.

ஹாய் திவ்யா நான் இப்பொழுது தான் இதை பார்த்தேன்.மன்னிக்கவும் தாமதத்திற்கு .நான் எப்பொழுதும் இட்லி,வெண்பொங்கலுக்கு செய்யும் முறையை கொடுக்கிறேன்.உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.இந்த அளவு எங்கள் இருவருக்கு செய்வது வேண்டுமானால் அளவை கூட்டி கொள்ளுங்கள்.
பாசிப்பருப்பு 2கைப்பிடி
பீன்ஸ்- 15 எண்ணம்
கேர்ட் - 1
காளிப்ளவர் - சில பூக்கள்
பச்சைமிளகாய்- 2
மிளகாய்தூள்- கால் தேக்கரண்டி
தனியாதூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் சிறிது
வெங்காயம் பெரியதாக இருந்தால் 1 ,சிறியது என்றால் 2
தக்காளி- 2
கொத்தமல்லி,கறுவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:எண்ணெய், கடுகு,உளுத்தம்பருப்பு சிறிது

செய்முறை:

பாசிபருப்பை தனியாக வேகவைத்து கொள்ளவும்.காடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பச்சமிளகாய், பீன்ஸ்,கேரட்,காளிப்ளவர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி,மிளகாய் தூள்,தனியாதூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.எல்லாம் சேர்ந்து வதங்கியதும் உப்பு சேர்த்து தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும்.காய்கள் வெந்ததும் பாசிப்பருப்பை அதோடு கலந்து,கறுவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்
அன்புடன் தீபா

தை பொங்கல் அன்றைக்கு செய்யும் தாளிக்காத வெண்பொங்கலுக்கு நாங்கள் பெரும்பாலும் பச்சை மொச்சை குழம்புதான் வைப்போம். மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி தாளித்த ( காலை சிற்றுண்டியாக செய்யும் ) வெண்பொங்கலுக்கு இந்த சாம்பார் நன்றாக இருக்கும்..
வர மிளகாய்- 3, மல்லி- 2 டீஸ்பூன், கடலைபருப்பு - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 4 இவற்றை ஆயில் விட்டு வறுத்து பொடி பண்ணவும். கடுகு, உளுந்து, பெருங்காயம், முழு சின்ன வெங்காயம் - 15, தக்காளி - 2 தாளித்து வெந்த துவரம்பருப்பை போட்டு, பொடியாக நறுக்கிய பறங்கிக்காய் துண்டுகள்- 10 போட்டு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் வாசனை தூள் கிளப்பும். பொங்கலுக்கு செம மேட்ச்.

பாத்திமா,தீபா,மாலதி உங்க எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள்.உங்க ரெசிபி செய்து அசத்திவிட்டு அப்பறம் உங்களுக்கு பின்னூட்டம் தருகிறேன்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

சாம்பார் செய்வதைவிட வற்றல் குழம்பு செய்து சுவைத்துப்பாருங்கள் அப்புறம் அதையேதான் செய்வீர்கள். செய்வதும் சுலபம்.

செய்முறை: புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் மிளகாய் பொடி - 4 ஸ்பூன், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு, கருவேப்பிலை

புளியை கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணை விட்டு கடுகு தாளித்து கருவேப்பிலை, ஏதாவது வற்றல் போட்டு தாளித்து பிறகு உப்பு, மிள்காய் பொடி, பெருங்காயம் போட்டு கொஞ்சம் நேரம் நன்கு வறுக்கவும். பிறகு புளிக்கரைசலை ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு சாப்பிடலாம்.

சாம்பார் தான் வேண்டும் என்பதில்லை. இந்த குழம்பு தனியாக சாதத்திலும் விட்டுச் சாப்பிடலாம். இந்த வற்றல் குழம்பு சாதம் சுடச் சுட சாப்பிட்டால் கூட ஒரு கவளம் வயிற்றில் செல்லும்.

செய்து பாருங்கள்"Always Keep Smiling"

"Always Keep Smiling"

kathrikkai gothsu nalla match

மேலும் சில பதிவுகள்