ஓட்ஸ் சிக்கன் சூப்

தேதி: January 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ஓட்ஸ் - கால் கப்
தண்ணீர் - ஒரு கப்
பால் - அரை கப்
வேக வைத்து கொள்ள:
எலும்பில்லாத சிக்கன் - கால் கப்
வெங்காயம் - கால் பாகம்
துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி (அ) இஞ்சி பூண்டு கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - இரண்டு கப்


 

சிக்கனில் வேக வைக்க வேண்டியவைகளை வேக வைக்கவும். குக்கரில் நான்கு விசில் விட்டு வடிகட்டவும்.
ஓட்ஸை ஒரு கப் தண்ணீர், அரை கப் பால் கலந்து காய்ச்சவும்.
பிறகு வெந்ததை வடிகட்டி தண்ணீரை மட்டும் சேர்த்து விட்டு சிக்கனை மட்டும் எடுத்து உதிர்த்து போடவும்.
சோயாசாஸ் ஒரு டிராப் ஊற்றி, முட்டை வெள்ளை கரு பாதியை மட்டும் நல்ல நுரை பொங்க அடித்து கட்டிப்பிடிக்காமல் ஊற்றி கிளறி இறக்கவும்.
சுவையான ஓட்ஸ் சிக்கன் சூப் ரெடி.


மேலும் சில குறிப்புகள்