இனிப்பு மசாலா ஓட்ஸ்

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பால் - ஒரு கப்
ஓட்ஸ் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 1.5 தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
பட்டை - அரை இன்ச் அளவுள்ள துண்டு
கிராம்பு - ஒன்று
நெய் - அரை தேக்கரண்டி


 

மேற்கண்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொதி வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சுலபமான சுவையான மசாலா ஓட்ஸ் ரெடி


எப்பொழுதும் பாலில் ஓட்ஸ் போட்டு சாதாரணமாக தான் செய்வேன். எனக்கு தெரிந்தவரின் வீட்டில் இம்முறையில் வைத்தது எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. என் பொண்ணு அதை விட விரும்பி சாப்பிட்டாள். அதன் பின் தினமும் என் மகளுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்.

மேலும் சில குறிப்புகள்