ஆம வடை/ கடலை வடை

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு -- 3/4 கப் (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்)
பட்டாணி பருப்பு -- 2 கைப்பிடி அளவு (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
பச்சரிசி -- 1 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
சோடாமாவு -- 3 சிட்டிகை


 

ஊறவைத்த பருப்புகளில் கொஞ்சத்தை எடுத்து வைத்து, மீதி உள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் வெங்காயம்,பச்சைமிளகாய், சீரகம், உப்பு, சோடாமாவு இவற்றை கலந்து பச்சரிசி மாவு போட்டு நன்கு பிசைந்து வாணலியில் காயும் எண்ணையில் தட்டி போட்டு எடுக்கவும்.
பட்டாணி பருப்பு போடுவதால் வடை மிகவும் க்ரிஸ்பாக இருக்கும்.
சுவையான உளுந்த வடை ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hello madam, is this masal vadai or ulunda vadai? Because finally you register that name. Sorry and thanks.

" Life is a Festival, Celebrate it "