மஞ்சள்பூசணி, கடலைபருப்பு கூட்டு

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மஞ்சள் பூசணி -- 1/4 கிலோ
கடலை பருப்பு -- 1 கப்
சின்ன வெங்காயம் -- 15 என்னம் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 என்னம் (நீளமாக கீறியது)
சாம்பார் பொடி -- 1 டீஸ்பூன்
சீரகம் -- 1/4 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
தாளிக்க:
சின்ன வெங்காயம் -- 3 என்னம் (பொடியாக நறுக்கியது)
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1இனுக்கு
சிவப்பு மிளகாய் -- 2 என்னம்
எண்ணைய் -- தாளிக்க


 

முதலில் கடலை பருப்பை வேகவைக்கவும்.
பாதி வேகும் போதே வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
இப்போது பூசணியை சேர்க்கவும் ஒரு கிளறு கிளறி சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும்.
இதை குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கவும்.
இதனுடன் தாளிக்க வேண்டியவைகளை சிவக்க வறுத்து தாளிக்கவும்.
பின் கூட்டு கலவை வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.
சுவையான பூசணி,கடலை பருப்பு கூட்டு ரெடி.


மேலும் சில குறிப்புகள்