பூசணிக்காய் ஹல்வா

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பூசணி துருவல் - ஒரு கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - ஐந்து
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்
சுண்டிய பால் - அரை கப்
நெய் - மூன்று தேக்கரண்டி


 

இரண்டு தேக்கரண்டி நெய்யை சூடுப்படுத்தி முந்திரியை பொடியாக நறுக்கி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் பூசணி துருவலை நல்ல வதக்கி சுண்டிய பால் சேர்க்கவும்.
இப்போது சுருண்டு வரும் போது ஏலக்காய் தூள், ரெட் கலர் பொடி சிறிது பாலில் கரைத்து ஊற்றி, சர்க்கரையும் சேர்த்து கிளறி ஹல்வா பதம் வரும் வரை கிளறி கடைசியில் மீதி உள்ள நெய், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.


வேறு ஏதாவது நட்ஸ் சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளுங்கள், சர்க்கரை இல்லாத பால் கோவா இருந்தால் கூட சேர்க்கலாம் அப்போது பால் சேர்க்க தேவையில்லை

மேலும் சில குறிப்புகள்


Comments

பானு கனி
தவுலத் பூசனிக்காய் ஹல்வா செய்யுங்கோ,
கேரளாவில் ஓனம் அன்று ஓலன் என்று செய்வார்கள்.
அது தளிக்கா விடம் கேட்டு செய்யுங்க.
ஜலீலா

Jaleelakamal

lapusaniyaithuruvi oru melliya thuNiiYil pOttu katti thongga vittaal thaNNIr ellam vadiyum. piragu nangugu pizindhu vittu halvaa seythaal Isiyaaga seyyaam

டியர்

உங்க ஐடியா சூப்பர்
இன்று பூசனிக்காய் ஹல்வா தான் ஒரு கண் வடி கட்டியில் துருவியதை வத்து விட்டேன் தண்ணீர் வடிந்தாதும் செய்தேன்.
ஜலீலா

Jaleelakamal

Thank you