எங்கள் ஊரில் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் இதை அதிகம் செய்து தருவார்கள். இடுப்புக்கும், கர்ப்பப்பைக்கும் பலம் கொடுக்கும்.
தேவையானப் பொருட்கள்
- குண்டு உளுந்து - 1/4 கிலோ,
- சர்க்கரை - 1/2 கிலோ,
- ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
- உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, ஆனால் பொதுபொதுப்பாக அரைக்கவும்.
- சர்க்கரையை 1 தம்ளர் தண்ணீர் விட்டு, கம்பி பாகு காய்ச்சவும்.
- ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.
- மாவை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காயளவு) உருட்டி, எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் போடவும்.
- அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.
குறிப்பு
சர்க்கரைப் பாகு சூடாக இருக்கும் போதே போண்டா போட வேண்டும். மாவில் தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் எண்ணெய் குடிக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
30 போண்டாக்கள் வரும். |
30 நிமிடங்கள். |
15 நிமிடங்கள். |