உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

காண்ட்வி

 


தேவையானப் பொருட்கள்

  • தயிர் - 3/4கப்,
  • கடலை மாவு - 1/2 கப்,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • பெருங்காயம் - சிறிது,
  • இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய் விழுது - 1/2 தேக்கரண்டி,
  • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது),
  • உப்பு - தேவையான அளவு.
  • தாளிக்க:-
  • -------------
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி,
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிது.
  • அலங்கரிக்க:-
  • -------------------
  • தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
  • கொத்துமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது).

செய்முறை

  • தயிரை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கடையவும்.
  • எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.
  • எண்ணெய் தடவிய தட்டையான பாத்திரத்தில் ஊற்றி, குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • வெந்ததை தட்டில் கொட்டி ஒரங்குல அகலத்துக்கு நீளமாக வெட்டி, பாய் போல் சுருட்டி வைக்கவும்.
  • எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து காண்ட்வி மேல் ஊற்றவும்.
  • தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி அலங்கரித்து மல்லி சட்னியுடன் பரிமாறவும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 15 நிமிடங்கள்.
  random food image


comments