www.arusuvai.com
காண்ட்வி
தேவையானப் பொருட்கள்
- தயிர் - 3/4கப்,
- கடலை மாவு - 1/2 கப்,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- பெருங்காயம் - சிறிது,
- இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி,
- மிளகாய் விழுது - 1/2 தேக்கரண்டி,
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது),
- உப்பு - தேவையான அளவு.
- தாளிக்க:-
- -------------
- எண்ணெய் - 2 தேக்கரண்டி,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது.
- அலங்கரிக்க:-
- -------------------
- தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
- கொத்துமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது).
செய்முறை
- தயிரை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கடையவும்.
- எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.
- எண்ணெய் தடவிய தட்டையான பாத்திரத்தில் ஊற்றி, குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- வெந்ததை தட்டில் கொட்டி ஒரங்குல அகலத்துக்கு நீளமாக வெட்டி, பாய் போல் சுருட்டி வைக்கவும்.
- எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து காண்ட்வி மேல் ஊற்றவும்.
- தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி அலங்கரித்து மல்லி சட்னியுடன் பரிமாறவும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
15 நிமிடங்கள். |