சிக்கன் மிளகு மசாலா

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
நெய் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைகரண்டி,
எலுமிச்சம் பழம் - 1மூடி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 ஸ்பூன்.

அரைக்க:
========
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 8 பல்,
தனியா - 2 மேசைக்கரண்டி,
மிளகு - 2 தேக்கரண்டி,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் - 2,
பட்டை - சிறிது,
கிராம்பு - 3,
புதினா - 1 கைப்பிடி.


 

கோழியை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கிய பின், இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், நெய் ஊற்றி, எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கி இறக்கவும்.


புலாவ், தோசைக்கு சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விம்மா,
நேத்து நைட் உங்க pepper masala தான் செய்தேன்,சிக்கனோட இல்ல,with green peas and corn.காரமா நல்லா இருந்தது.
ருமாலி ரொட்டி பத்தி கேட்டேனே செல்விமா,நீங்க பார்க்கலியா?

அன்பு விஜி,
ம்ம்,மசாலாவை எதனுடனும் சேர்க்கலாம். நல்லா இருக்கும். பார்க்கலைப்பா. இரண்டு நாளாக ஹாஸ்பிடல் வாசம். இன்று தான் வந்தேன். இனி தான் பார்க்கணும். பார்த்து சொல்றேன்ப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.