உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பாலக் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) மசியல்

 


தேவையானப் பொருட்கள்

  • பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 100 கிராம்,
  • பாலக்கீரை - 20,
  • பெரிய வெங்காயம் - 2,
  • பச்சை மிளகாய் - 2,
  • சீரகம் - 1 தேக்கரண்டி,
  • இஞ்சி - 1 அங்குல துண்டு,
  • பூண்டு - 8 பல்,
  • பெருங்காயம் - சிறிது,
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி,
  • மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை

  • பச்சைப்பயிறை லேசாக வறுத்து, இரண்டாக உடைத்து தோல் நீக்கி வைக்கவும். (மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் உடைந்து விடும்)
  • உடைத்த பயிறை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
  • கீரை, வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
  • பச்சை மிளகாயை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கிய பின், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • 1/2 நிமிடம் கழித்து வேகவைத்த பயிறு சேர்க்கவும்.
  • கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரை, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.

குறிப்பு:

சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
random food image


comments
செல்விமா
ஜனவரி 23, 2008 - 4:05pm - வழங்கியவர் pradeebala

செல்விமா நேற்று பாலக் பாசிப்பயிறு மசியல் செய்தேன்.என்னிடம் பாசிப்பயிறு இல்லாததால் பாசிப்பருப்பு யூஸ் பண்ணினேன்.நன்றாக இருந்தது.நன்றி
அன்புடன் தீபு