தேவையானப் பொருட்கள்
- பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 100 கிராம்,
- பாலக்கீரை - 20,
- பெரிய வெங்காயம் - 2,
- பச்சை மிளகாய் - 2,
- சீரகம் - 1 தேக்கரண்டி,
- இஞ்சி - 1 அங்குல துண்டு,
- பூண்டு - 8 பல்,
- பெருங்காயம் - சிறிது,
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை
- பச்சைப்பயிறை லேசாக வறுத்து, இரண்டாக உடைத்து தோல் நீக்கி வைக்கவும். (மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் உடைந்து விடும்)
- உடைத்த பயிறை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
- கீரை, வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாயை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கிய பின், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 1/2 நிமிடம் கழித்து வேகவைத்த பயிறு சேர்க்கவும்.
- கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரை, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
குறிப்பு
சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |