வெஜிடபிள் மசாலா சந்தவை

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1 கிலோ,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
===============
காரட் - 1,
பீன்ஸ் - 6,
பச்சைப்பட்டாணி - 1 கைப்பிடி,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 கரண்டி.


 

சந்தவை செய்ய :-
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
கடைசியாக எடுக்குமுன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
எடுத்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.
சந்தவை பிழிவதற்கு என தனியாக ஒரு நாழி விற்கிறது.
இட்லி வெந்ததும், அடுப்பில் வைத்துக் கொண்டே சூடாக நாழியில் இரண்டு இட்லிகளை போட்டு பிழியவும்.
இதே போல எல்லா இட்லிகளையும் பிழியவும். எல்லாமாவிலும் சேவை செய்து கொள்ளவும்.
தாளிக்கும் முறை :-
வெங்காயம், காரட், பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
காரட், பீன்ஸ், பட்டாணியை ஆவியில் வேவ வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்களையும் சேர்த்து வதக்கவும்.
மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, பிழிந்து வைத்துள்ள சந்தவையை உதிர்த்து போட்டு கிளறவும்.லேசாக உப்புத்தூள் தூவவும்.
நன்கு உதிராக வந்ததும் இறக்கவும்.


மாவு ரொம்ப கெட்டியாகவோ, தண்ணியாகவோ இருக்கக் கூடாது. இட்லி சூடாக இருக்கும் போதே பிழிய வேண்டும், இல்லையேல் பிழிய கஷ்டமாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்