ப்ரட் ஸ்ப்ரிங் ரோல்ஸ்

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரட் -- 5 என்னம்
கேரட் -- ஒரு கைப்பிடி (துருவியது)
முட்டைகோஸ் -- ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
மிளகாய் பொடி -- 1 டீஸ்பூன்
கரம்மசாலா பொடி -- 1/2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது -- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1 சிட்டிகை
எண்ணைய் -- பொரிக்க
உப்பு -- ருசிக்கேற்ப
கடுகு -- 1/4 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து இஞ்சி,பூண்டு விழுது போட்டு ஒரு வதக்கு வதக்கி கேரட்,முட்டை கோஸை போடவும்.
கொஞ்சம் வதக்கி, பின் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி வைக்கவும்.
ப்ரட்டை ஓரத்தை வெட்டி நீரில் நனைத்து லேசாக பிழிந்து அதன் மேல் தயாரித்த மசாலாவை வைத்து ரோல் செய்யவும்.
இந்த ரோல்ஸ்ஸை எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
அதை தக்காளி சாஸுடன் பரிமாற சூப்பர் ப்ரட் ரோல்ஸ் ரெடி


மேலும் சில குறிப்புகள்