உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்

 

சற்று ரிச்சாக வேண்டுமானால் வறுத்த முந்திரியைச் சேர்க்கலாம். திடீர் விருந்தினரை சமாளிக்க உதவும். இதற்கு அப்பளம், பப்படம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ் நல்ல காம்பினேஷன்.

தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி - 1 1/2 கப்
  • துவரம்பருப்பு - 1/2 கப்
  • நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்
  • வெங்காயம் - 1
  • புளி - எலுமிச்சை அளவு
  • சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
  • நெய் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

  • முதலில் குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு துவரம்பருப்பைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • காய்களை நறுக்கி, புளி கரைத்து, வெங்காயம் வதக்கி -எல்லாம் ரெடி செய்யும் வரை துவரம்பருப்பு வெந்து கொண்டிருக்கட்டும்.
  • பிறகு அரிசியைக் களைந்து சேர்க்கவும்.
  • எண்ணையில் வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறித்துண்டுகள், கரைத்த புளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பச்சைக் கொத்தமல்லியைத்தூவிக் கிளறி மூடி வைக்கவும்.

வழங்கியவர்

T S JAYANTHI CHENNAI 600 048

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 5 நிமிடங்கள் 20 நிமிடங்கள்
  random food image


comments
சாம்பார் சாதம் சூப்பர்
மார்ச் 13, 2008 - 3:47pm - வழங்கியவர் pradeebala

ஜெயந்தி மாமி நலமா?எங்க அறுசுவை பக்கம் ஆளையே காணோம்.உங்க சாம்பார் சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.நன்றி
அன்புடன் தீபா

கிரியா ஊக்கி
மார்ச் 28, 2008 - 5:02am - வழங்கியவர் T S JAYANTHI

ஹாய் தீபு,
நன்றி பெண்ணே. அறுசுவைக்கு வந்து நாளாச்சு. குறிப்பு கொடுத்தும் நாளாச்சு. இந்த பின்னூட்டம் உற்சாகத்தை வரவழைக்கிறது. ஆரம்பிக்க வேண்டியதுதான். ஆனால் சுபா, செல்வியை நெருங்க முடியாது போல இருக்கே.
கிரியா ஊக்கின்னதும் நம்ப ஜானகி ஞாபகம் வந்துடுத்தே. எங்க ஜானகி.
அன்புடன்
ஜெயந்தி மாமி