வெஜ் பிரியாணி

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு: 10 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பாசுமதி அரிசி - ஒரு படி ( எட்டு ஆழாக்கு)
டால்டா - 200 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
இஞ்சி - 150 கிராம்
பூண்டு - 75 கிராம்
தயிர் - ஒரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 11
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
புதினா - அரை கட்டு
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
பட்டை - ஒரு இன்ச் அளவு (மூன்று)
கிராம்பு - மூன்று
ஏலக்காய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
ரெட் கலர் பொடி - சிறிது
காய்கள் - மொத்தம் ஒரு கிலோ
உருளைக்கிழங்கு - 400 கிராம்
கேரட் - 1/4 கிலோ
பீன்ஸ் - 150 கிராம்
பட்டாணி - 150 கிராம்
பீட்ரூட் - 100 கிராம்


 

அரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும்
பிரியாணி தாளிக்கும் பெரிய சட்டியில் எண்ணெய், டால்டா ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்புவை போடவும்.
பிறகு வெங்காயம் முழுவதும் நீளமாக நறுக்கி போட்டு நன்கு வதக்கி நிறம் மாறியதும்,பூண்டை போட்டு கிளறவும். அடுத்து கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஒடித்து போட்டு கிளறி தீயை சிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து காய்களில் முதலில் உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக போடவும், கேரட்டை வட்ட வடிவமாக கொஞ்சம் தடிமனாக வெட்டி போடுங்கள் இல்லையென்றால் காய்கள் குழைந்து விடும்.
காய்களை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். அதில் தக்காளியை நான்காக நறுக்கி போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் துள், உப்பு போட்டு வதக்கி மூடி போட்டு சிம்மில் இரண்டு நிமிடம் விடவும். பிறகு தயிரை அடித்து கலக்கி ஊற்றி நன்கு கிளறி, அரை மூடி எலுமிச்சைப்பழத்தை பிழிந்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும். எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் வடித்து தான் போட வேண்டும்.
பக்கத்தில் இது வேகுவதற்குள் உலையை கொதிக்க வைத்து தாராளமாக பெரிய சட்டியை வைக்கவும்.
அதற்கென்று அன்டாவை ஏற்றி விடவேண்டாம். ஒரு படி ஆக்கும் சட்டி, உலை கொதித்ததும் அரிசியை வடிகட்டி போடவும். (புளி வடிகட்டியால் கூட போடலாம்)
தேவையான அளவு உப்பு சேர்க்கவும் முக்கால் பதம் வந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரை முடி எலுமிச்சை சாறு பிழியவும்.
உடனே ஒரு பெரிய கண் வடிகட்டியில் கொட்டி விடவேண்டும். அதிலுள்ள கஞ்சி தண்ணீரை தூர ஊற்ற வேண்டாம்.
இப்போது கிரேவியில் இந்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, நெய் சிறிது ஊற்றி, ரெட் கலர் பொடியை ஒரு தேக்கரண்டி கஞ்சியில் கரைத்து ஊற்றி சாதம் மீது தெளிக்கவும்.
இப்போது தம் போடவும்.
தம் என்பது அரிசி சாதத்தை புழுங்க விடுவது. தீயை நல்ல குறைத்து சிம்மில் வைத்து அதன் மீது தோசை தவ்வா (அ) பிஸ்கேட் டின் மூடி (அ) தம் போடும் கருவி வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை ஏற்றி பத்து நிமிடம் கழித்து லேசாக ஒரு கிளறு கிளறி மறுபடியும் பத்து நிமிடம் தம் போடவும்.
சுவையான வெஜ் பிரியாணி ரெடி.


இந்த அளவு பார்டி விசேஷங்களுக்கு செய்யலாம்.
இதற்கு தால்சா, தால்சாவில் கறி எலும்பு போட்டு செய்வார்கள், நான் வெஜ்டேரியனுகளுக்காக கறி எலும்பில்லாமல் கொடுத்துள்ளேன் (அ) எண்ணெய் கத்திரிக்காய் சட்னியும் உள்ளது. தயிர் சட்னி போன்றவை வைத்து சாப்பிடலாம். டால்டா வேண்டாம் என்று நினைத்தால் எண்ணெயை முழுவதும் போட்டு கொண்டு, நெய் ஐம்பது கிராம் சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ரதி உங்களுக்காக வெஜ் பிரியானி கொடுத்து விட்டேன்.
இந்த ரெஸிபி மட்டும் நான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த நாலிலேயே பாதி டைப்பண்ணி விட்டேன். ஆனால் அனுப்பமுடியவில்லை, பதினைந்து முறை டைப் பண்ணி இப்ப தான் வந்து சேர்ந்தது , மெதுவா படித்து பார்த்து செய்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று, காய் உங்க இழ்டம் வேறு ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

Dear Madam,
Thankyou so much for your reply.I'll try and tell you how it came.Take care. bye.thankyou.

Dear madam,
I like to try your veg biriyani.Can you plz give the measurement of rice and curd in grams?Thank you.

வெஜ் பிரியாணி(டியர் நிருப்பமா)
தயிர் ஒரு ஆழாக்கு என்பது இருநூரு கிராம்.

பாசுமதி அரிசி ஒரு படி என்பது எட்டு டம்ளர்
அதாவது ஒன்னறை கிலோவும்,கூட அரை டம்ளரும்.

இது விஷேஷங்களுக்கு செய்யும் அளவு,

இது ஒரு பதினைந்து பேர் சாப்பிடலாம்.

ஜலீலா

Jaleelakamal

Dear madam,
Thanks for your quick reply for clearing me the doubt.I will try it out at the earliest and tell you the reply.

Thanks
Nirupama

புது வரவு விஜி வருக வருக
இதோ சுலபமாக வெஜ் பிரியாணி
ஜலீலா

Jaleelakamal

ஜம்மிலா மம்,
தாங்ஸ் ஜல்லீலா மம்,

எநநக்கு வெஜ் குருமா ரஸ்ஸிப்பி குட வேன்ட்டும்.

தாங்ஸ்.

டியர் விஜி

அக்கான்னு கூப்பிடுங்க

வெள்ளை வெஜ் குருமா கொடுத்துள்ளேன்
வெஜ் குருமாவும் கொடுக்கிறேன் கூடிய விரைவில்.
ஜலீலா

Jaleelakamal

தாங்ஸ்

எங்கடா அக்கா கிட்டே இருந்து எனக்கு பதில் வரவில்லேயே என்று காத்ட்திட்டு இருந்தேன். இப்பதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

எல்லாரும் சொல்ர்ரங்க ஜலிலா அக்கா உடனே பதில்

என்ன ஜல்லிலா அக்கா எனக்கு துபாய்யில் கோல்ட் வாங்க்கா வேண்டும் என்றால் எந்த கடை பெஸ்ட் என்று சொல்லுங்கள். அப்புறம் உங்கள் தோழிகளிடம். ஜனாகி,தாலிகா,கதிஜா,ஜயந்தி,தேவா,மனொகர் etc..என்னையும் கொஞன் அரிமுகபடுத்துங்கள். நானும் அரட்ட்ய் பன்ன வருகிஎன். தாங்ஸ்

டியர் விஜி
அல் ஹஸீனா ஜுவெல்லர்ஸ் மிகவும் பெயர் போனது. சுத்தமாக இருக்கும் எப்ப வேண்டு மானாலும் மாற்றலாம்.(04 - 2264565)

பிறகு நிஷாந் ஜுவெல்லர்ஸ் சிறிய கடைதான் ஆனால் அவர்கள் பொருமையாக நமக்கு சொல்வார்கள்
அடுத்து அட்லெஸ்,பிறகு அல்லுகாஸ் இங்கு எல்லம் எப்படி என்று தெரியாது டிசைன் நல்ல இருக்கும்.

அறட்டையை சிறிது காலம் நிருத்தி வைத்துள்ளேன்.
தளிக்கவை காணும். ஒன்றும் பதில் இல்லை.
மர்லியா அக்கவிற்க்கு டெலிவரிக்காக ஊருக்கு போய் இருக்கிறார்கள். ஒரு மாதம் ஆகும்.

மற்ற படி எல்லோரும் வருகிறார்கள்.
கண்டிப்பாக என்ன டவுட் என்றாலும் என்னிடம் கேட்கலாம்.நான் தயார் பதில் சொல்ல.
இப்படிக்கு உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா

ரொம்ம்ப தாங்ஸ்

என்னக்கு கூட்டஞ்சசோறு பகுதியில் குறிப்புகள் அனுப்பவேன்டும் என்றால் எப்பிடி அனுப்பவேன்டும்.

உங்கள் பொண்ணு மலச்சிக்கலால் கஷ்டப்படுவதாக சொல்லி இருக்கிறீர்கள் மனோஹரி மேடத்திடம் நான் முன்னாடி கேட்டு இருக்கேன் அவங்கள் பதில் சொல்லி இருக்காங்க இந்த த்ரெட்ல போய் பாருங்க. http://www.arusuvai.com/tamil/forum/no/3978 வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்க என் பையனும் இதனால் முன்னாடி ரெம்பவும் கஷ்டப்பட்டான் இப்ப சரியாகிட்டு கவலை படாதீங்க உங்க பொண்ணுக்கும் சீக்கிரம் சரியாகிடும்.

அன்புடன் கதீஜா.

அன்புடன் கதிஜா

எப்பிடி இருக்கிங்க? ரொம்ப தாங்ஸ். நான் செய்த்து பார்க்கிரென்.

கூட்டாஞ்சோறில் குறிப்பு அனுப்ப
விஜி நேராக பாபி தம்பிக்கு அனுப்புங்க.
அப்படி இல்லை என்றால் அவர் போடுவார் பிறகு பிறகு இடது புறத்தில் குறிப்பு சேர்க்க என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கே தெரியும்.
ஸ்டெப் பை ஸ்டெப் அதன் படி காப்பி பேஸ்ட் செய்யவும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் உங்கள் பிரியாணி செய்தேன் நல்லா இருக்குன்னு அவரு சொன்னார்..குட்டிக்கும் பிடிச்சிருக்கு..பச்சை மிளகாய் கொஞ்சம் கம்மியா சேர்த்தேன்(குட்டி சாப்பிடுவதால்),பீட்ரூட்,புதினா சேர்க்கவில்லை(வீட்டில் இல்லை),கலர் பொடியும்(மறந்துவிட்டேன்) சேர்க்கவில்லை..நீங்கள் சொன்னபடி தான் செய்தேன்..சுவையும்,மனமும் நன்றாக இருந்தது..நன்றி அக்கா..

டியர் சாந்தோ வெஜ் பிரியாணி உங்கள் குட்டிக்கும் பிடித்ததா?
மிக்க மகிழ்சி..
உங்கள் பின்னூட்டம் என்ற பூஸ்ட்டுக்கும் மிக்க நன்றி
ஜலீலா

Jaleelakamal

சூப்பர் வெஜிடபிள் பிரியாணி.. மீன் வருவலுடன் அருமை

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நேற்று உங்களுடைய வெஜிடபில் பிரியாணி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது, அடுத்தமுறையும் இதே போல் செய் என்றார். இதுவரை இரண்டு முறை செய்து விட்டேன். இரண்டு முறையும் நன்றாக வந்தது.உங்கள் குறிப்பிற்க்கு நன்றி.

அன்புடன்

காயத்ரி பாபு

டிய‌ர் காய‌த்திரி பாபு உங்க‌ள் பின்னூட்ட‌த்துக்கு மிக்க‌ ந‌ன்றி.
ஓ இரு முறை செய்து விட்டீர்க‌ளா?ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம். உங்க‌ள் க‌ண்வ‌ருக்கு பிடித்திருந்தது என்றீர்க‌ள். கேட்க‌வே ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கு.

என்னுடைய‌ எல்லா வ‌கையான‌ பிரியாணியுமே ஒன்றுக்கு ஒன்று மிஞ்சிய‌ சுவையில் இருக்கும், கூடிய விரைவில் பிரியாணி குறிப்பு ப‌ட‌த்துட‌ன் கொடுக்கிறேன்.

ஜ‌லீலா

Jaleelakamal