இட்லி மிளகாய் பொடி மற்றொரு வகை

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
தனியா விதை - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 20
கறிவேப்பிலை - 1 கப்
பூண்டு - 10 பல்
அரிசி - 1 கைப்பிடி
கெட்டி பெருங்காயம் - 2"துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் சூடாக்கி பெருங்காயத்தை போட்டு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் உப்பு, அரிசி தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிவக்க வறுக்கவும்.
தனியே எடுத்து ஆற வைக்கவும். அதே வாணலியில் அரிசியை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
உப்பை வாணலியில் போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும்.


உப்பை வறுப்பதால் அதில் உள்ள தண்ணீர் போய் விடும். அதனால் மிளகாய் பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எள் வாசனை பிடிக்குமானால் 1 மேசைக்கரண்டி அளவு பருப்புகளை வறுக்கும் போது சேர்க்கலாம். கெட்டி பெருங்காயம் இல்லையென்றால் பருப்புகளை வறுக்கும் போது 1 1/2 தேக்கரண்டி அளவு பெருங்காய தூள் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி ஜலீலாக்கா இட்லி பொடி தான் இப்ப செஞ்சு சப்பீட்டிட்டிருக்கேன் அது சூப்பரா இருக்கு..எனக்கு பூண்டு பிடிக்கும் இனி உங்கள்து செய்னும்..ஆனால் பூண்டு போடுவதால் மாவு போல இருக்காதா கெடாதா.இல்ல ட்ரை ஆகுமா

தளிகா பூண்டை வறுத்துடறதால அதுல உள்ள ஈரம் போயிடும்.அதனால கெடாது.பூண்டு பல் ரொம்ப பெரிசா இருந்தா ஸ்லைஸ் பண்ணி போடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா

நேற்று காலையில அலுவலகம் செல்லும் அவசரத்தில் உங்களுடைய இட்லிபொடி செஞ்சேன்.. ரொம்ப நல்லா இருந்தது.

சட்னி அரைக்கரதுக்கு எதுவும் வீட்ல இல்ல.. வெறும் பொடி மட்டும் எப்படி கணவருக்கு குடுக்கறதுன்னு பயந்துகிட்டேதான் செய்தேன்...நல்லா இருந்ததுன்னு சாப்பிட்டாங்க :-) நன்றி

நீங்க குடுத்த அளவுகள் அவசரத்துக்கு மாத்தறதுக்கு ஈஸியா இருந்தது.. உளுந்து 3 ஸ்பூன் ,கடலைபருப்பு 3 ஸ்பூன் அப்படின்னு எனக்கு தகுந்த மாதிரி எல்லா அளவுகளையும் மாத்திக்கிட்டேன்.

பொடி நேத்து நைட்டே காலி :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹாய் சங்கீதா இட்லி பொடி நல்லா வந்துதா?ரொம்ப சந்தோஷம் பா.பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!