தேவையானப் பொருட்கள்
- உளுந்து-1கப்
- கடலை பருப்பு-1கப்
- தனியா விதை-1/4கப்
- மிளகாய் வற்றல்-20
- கறிவேப்பிலை-1கப்
- பூண்டு-10பல்
- அரிசி-1கைப்பிடி
- கெட்டி பெருங்காயம்-2"துண்டு
- உப்பு-தேவையான அளவு
- எண்ணெய்-2தேக்கரண்டி
செய்முறை
- வாணலியில் எண்ணெய் சூடாக்கி பெருங்காயத்தை போட்டு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
- அதே எண்ணெயில் உப்பு,அரிசி தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிவக்க வறுக்கவும்.
- தனியே எடுத்து ஆற வைக்கவும்.
- அதே வாணலியில் அரிசியை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
- உப்பை வாணலியில் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும்.
-
குறிப்பு
உப்பை வறுப்பதால் அதில் உள்ள தண்ணீர் போய் விடும்.அதனால் மிளகாய் பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
எள் வாசனை பிடிக்குமானால் 1மேசைக்கரண்டி அளவு பருப்புகளை வறுக்கும் போது சேர்க்கலாம்.
கெட்டி பெருங்காயம் இல்லையென்றால் பருப்புகளை வறுக்கும் போது 11/2தேக்கரண்டி அளவு பெருங்காய தூள் சேர்க்கலாம்.