தேவையானப் பொருட்கள்
- பாகற்காய் - பெரியது 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- எலுமிச்சம்பழம் - 1 மூடி
- காய்ச்சிய பால் - 1/2 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- சூப் பவுடர் - 1 டீஸ்பூன்
- தாளிக்க -
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பட்டை - 1
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
|
செய்முறை
- பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலம்பி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் வெந்த பாகற்காய், சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- இறக்கி உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழியவும்.
- கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
23 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -