www.arusuvai.com
பாகற்காய் சூப்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சூப்பை வாரத்திற்கு 2, 3 தடவை அருந்தலாம்.
தேவையானப் பொருட்கள்
- பாகற்காய் - பெரியது 1
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- எலுமிச்சம்பழம் - 1 மூடி
- காய்ச்சிய பால் - 1/2 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- சூப் பவுடர் - 1 டீஸ்பூன்
- தாளிக்க -
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பட்டை - 1
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலம்பி சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் வெந்த பாகற்காய், சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- இறக்கி உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழியவும்.
- கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |