சம்பாரம்

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 1 கப் அல்லது கடைந்த மோர் - 2 கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 பின்ச்
இஞ்சி - 1 சின்ன துண்டு
மல்லி இலை - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தயிரை நன்றாக அடித்து 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். மோராக இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை கரகரப்பாக இடித்து மோரோடு கலக்கவும். உப்பு, பெருங்காயம், மல்லி இலை சேர்த்து கலக்கவும்.
சம்பாரம் ரெடி.


சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அப்படியே குடிக்கவும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்