வெங்காயதாள் பொரியல்

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயத்தாள் - 1 கப் (1"நீளத்தில் வெட்டியது)
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டிய வெங்காயத்தாள், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
தண்ணீர் வற்றி வெங்காயத்தாள் வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கவி சிவா
வெங்காயத் தாள் நீளமாக என்றால் சின்ன சின்னதாகவா (நீளமாக) வெட்ட வேண்டும். நான் இதை செய்யலாம் என்று இருக்கிறேன்.

வெங்காயத் தாளை 1இன்ச் நீளத்தில் வெட்டி செய்யுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சிவா
வெங்காயத்தாள் இவர் நிறைய வாங்கிவந்துவிட்டார் என்ன பண்றது தெரியாம இருந்தேன் எதேச்சையா உங்க ரெசிபிய பார்தேன். நான் இதை செய்து பார்துவிட்டு சொல்றேன்.

கவி சூடாவே சாப்பிடுங்க.ரொம்ப ஆறிடுச்சுன்ன சுவை குறையும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா
உங்க வெங்காயத்தாள் பொரியல் நல்லா இருந்தது.அன்றைகே செய்துவிட்டேன்.பின்னுட்டம் அனுப்ப தாமதமாயிட்டது. நன்றி இந்த குறிப்பை குடுத்ததற்கு.