மாங்காய் உப்பிலிட்டது

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 2
உப்பு - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3


 

மாங்காயை பொடியாக நறுக்கவும். ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடவும்.
இந்த தண்ணீரில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மாங்காய் ஆகியவற்றை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். ஒரு நாள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.


மாங்காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் தண்ணீரின் மேல் வெள்ளையாக ஒரு படலம் வரும் அதை நீக்கி விட்ட பயன் படுத்தலாம். தண்ணீரின் நிறம் அதிகமாக மாறி விட்டால் தண்ணீரை மாற்றி வேறு தண்ணீரும் உப்பும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்பா கவி படிக்கும்போதே எனக்கு நாக்கில் நீர்.சம்பாரமும் மாங்காயும் நெல்லிக்காயும்.

நானும் மாங்காயும் நெல்லிக்காயும் கிடைக்காம ஏங்கிகிட்டேதான் டைப் பண்ணினேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆனா கவி எனக்கு இங்க கிடைக்கும்..போன வாரம் தான் ஒரு 30 நெல்லிக்காயை உப்பிலிட்டு முழுசா தீத்தேன்..மாங்காயை உப்பிலிட எங்க பொருமை அப்படியே சாப்ப்பிடுவேன்.மாங்காயை பொடியா கட் பன்னிட்டு உப்பு ,மிளகு தூள்,கொஞ்சம் சர்க்கரை,தே.என்னை கலந்து சாப்பிட்டாஆஆஆஅ

எனக்கும் மாங்காயை பொடியா கட் பன்னிட்டு உப்பு ,மிளகு தூள்,கொஞ்சம் சர்க்கரை,தே.என்னை கலந்து சாப்பிட பிடிக்கும்.எல்லாம் ஊருக்கு போனாதான் சாப்பிடலாம்.இங்கே எப்போவாதுதான் கிடைக்கும்.சிங்கப்பூரிலும் வாங்கலாம்.ஆனா அதை மீன் குழம்பில் யூஸ் பன்னிடுவேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு கிளி மூக்கு மாங்காய் தான் பிடிக்கும், நெல்லிகாய் அரை நெல்லிக்காய்
ஜலீலா

Jaleelakamal