தேவையானப் பொருட்கள்
- மாங்காய்-2
- உப்பு-3மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய்-3
செய்முறை
- மாங்காயை பொடியாக வெட்டவும்.
- 1லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற விடவும்.
- இந்த தண்ணீரில் உப்பு,பொடியாக வெட்டிய பச்சை மிளகாய்,மாங்காய் ஆகியவற்றை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
- 1நாள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
-
குறிப்பு
மாங்காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.ஒன்றிரண்டு நாட்களில் தண்ணீரின் மேல் வெள்ளையாக ஒரு படலம் வரும் அதை நீக்கி விட்ட பயன் படுத்தலாம்.தண்ணீரின் நிறம் அதிகமாக மாறி விட்டால் தண்ணீரை மாற்றி வேறு தண்ணீரும் உப்பும் சேர்க்கலாம்.