தேங்காய் பால் சோறு

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு: 6 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி
தேங்காய் - ஒன்று (சிறிய மூடி)
வெங்காயம் - நான்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து தேக்கரண்டி
கொத்தமல்லி - அரை கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - நான்கு
உப்பு - தேவைக்கு
வெந்தயம் - கால் தேக்கரன்டி
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
ஏலம் - ஒன்று
கிராம்பு - மூன்று


 

அரிசியுடன், வெந்தயம் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி பாலெடுக்கவும்.
ஒரு கப்புக்கு இரண்டு கப் வீதம் தேவை.
குக்கரில் அல்லது ரைஸ் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் சிவக்க வேண்டாம்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, பாதி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு வதக்கி தேங்காய் பாலை அளந்து ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் ஊறிய அரிசியை போட்டு, உப்பும் சேர்த்து நல்ல கொதிக்கும் போது மீதி கொத்தமல்லி, புதினாவை போட்டு மூடி போட்டு உடனே வெயிட் போட வேண்டியது.
தீயை மிதமாக வைக்கவும். நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.


இஸ்லாமிய இல்ல விசேஷங்களில் தேங்காய் பால் சோறு, மீன் சால்னா, மீன் ஃப்ரை, ப்ளையின் தால், அப்பளம், தக்காளி ஹல்வா செய்வார்கள். இது ஒரு நல்ல காம்பினேஷனும் கூட.
இதற்கு சிக்கன் குருமா, சிக்கன் ஃப்ரை, பருப்பும் சப்பிடலாம். மட்டனும் சாப்பிடலாம். இதை பச்சரிசியிலும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

OK but not very nice I have tried already but need not add venthayam

சுல்தான் அண்ணா
நீங்கள் சொல்லும் தேங்காய் சோறு இதுவான்னு பாருங்க
மெஹர் மனி (அண்ணன் தம்பி வொயிஃப்களை அப்படிதான் கூப்பிடுவோம்) எங்க ஆபிஸிலும் உடன் குடி ஆட்கள் முன்பு வேலை பார்த்தார்கள், இப்ப ஒருத்தர் இருக்கிறார் ஆனல் அவர் சென்னையில் செட்டி ஆகியாச்சு.
ஜலீலா

Jaleelakamal