இஸ்லாமிய இல்ல விஷேஷ்ங்களில் தேங்காய் பால் சோறு, மீன் சால்னா, மீன் பிரை, பிளெயின் தால், அப்பளம்,தக்காளி ஹல்வா செய்வார்கள்.இது ஒரு நல்ல காம்பினேஷனும் கூட.
தேவையானப் பொருட்கள்
- பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி
- தேங்காய் - ஒன்று (சிறிய முறி)
- வெங்காயம் - நான்கு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து தேக்கராண்டி
- கொத்து மல்லி - அரை கட்டு
- புதினா - கால் கட்டு
- பச்ச மிளகாய் - நாலு
- உப்பு - தேவைக்கு
- வெந்தயம் - கால் தேக்கரன்டி
- எண்ணை - முன்று தேக்கரணி
- பட்டை - இரண்டு துண்டு
- ஏலம் - ஒன்று
- கிராம்பு - முன்று
செய்முறை
- அரிசியுடன் ,வெந்தயம் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- தேங்காயை துருவி பாலெடுக்கவும்.
- ஒரு கப்புக்கு இரண்டு கப் வீதம் தேவை.
- குக்கரில் அல்லது ரஸ் குக்கரில் எண்ணை ஊற்றி பட்டை கிராம்பு,ஏலம் போட்டு தாளித்து வெங்காயம் போடு வதகவும் சிவறவெண்டாம.
- அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, பாதி கொத்துமல்லி, புதினா, பச்ச மிளகாய் போட்டு வதக்கி தேங்காயை பாலை அளந்து ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் ஊறிய அரிசியை போட்டு ,உப்பும் சேர்த்து நல்ல கொதிக்கும் போது மீதி கொத்து மல்லி, புதினாவை போட்டு மூடி போட்டு உடனே வெயிட் போடவேண்டியது.
- தீயை மிதமாக வைக்கவும்.
- நான்கு விசில் வந்ததும் இரக்கவும்.
-
-
குறிப்பு
இதற்கு சிக்கன் குருமா,சிக்கன் பிரை,பருப்பும் சப்ப்டலாம்.மட்டனும் சாப்பிடலாம்.இதை பச்சரிசியிலும் செய்யலாம்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 person |
20 min |
20 min |