கல்யாண அவியல்

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1 துண்டு
கத்திரிக்காய் - 1
கொத்தவரங்காய் - 10
முருங்கைக்காய் - 1
சேனை - 1 துண்டு
புடலங்காய் - 10 செ.மீ துண்டு
மாங்காய் - 1/2 பாகம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 1 கப்
சின்னவெங்காயம் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி


 

எல்லா காய்களையும் 2"நீளத்தில் விரலளவு தடிமனில் நறுக்கவும். சேனையை தனியே வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.
காய் வெந்தது தண்ணீர் பாதியாக வற்றியதும் வேகவைத்த சேனை அரைத்த கலவை போட்டு 3 நிமிடம் கிளறவும்.
மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.


மாங்காய் கிடைக்கவில்லையென்றால் காய் வெந்து தேங்காய் கலவை சேர்க்கும் போது தயிர் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப அளவை கூட்ட குறைக்க செய்யலாம். கல்யாண வீடுகளில் வைக்கும் இந்த அவியல் தனி சுவைதான்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த அவியலைத்தான் நான் தேடினேன். எங்கள் ஊரில் இப்படித்தான் அவியல் செய்வாங்க. கல்யாண வீட்டில் இந்த அவியல் அருமையாக இருக்கும். நன்றி கவிசிவா.

ஜெயா

ஹாய் ஜெயா! நீங்கள் நாகர்கோவிலா? செய்து பாருங்க. அம்மியில் அரைத்து வைத்தால் சுவையே அலாதிதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!