இனிப்பு நெல்லிக்காய்

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெல்லிக்காய் - பத்து
சர்க்கரை - அரை கப்
உப்பு - ஒரு பின்ச்


 

ர்க்கரையை அரைகப் தண்ணீர் ஊற்றி தண்ணி பாகு காய்ச்சி ஆற வைக்கவும்.
நெல்லிக்காயை நான்காக நறுக்கி விதையை நீக்கி விட்டு அதை குக்கரில் வைத்து உப்பு ஒரு பின்ச் போட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் சர்க்கரை பாகில் போட்டு ஊறியதும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சாப்பிடவும்.
பிறகு தயாரித்து வைத்துள்ள ஜீராவில் போட்டு நல்ல ஊறவைத்து சாப்பிடவும்.
அல்லது மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் நான்காக அரியாமல் நாலு பக்கமும் மாங்காய்க்கு கீறுவது போல் கீறி ஒரு பின்ச் உப்பு போட்டு வேகவைத்து இறக்கி சர்க்கரை பாகு (அ) வெல்லபாகு (அ) தேனில் நன்கு ஊற வைத்து சாப்பிட வேண்டும்


ஆகா சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை. குழந்தைகள் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள். கர்ப்பிணி பெண்களுக்கோ அது தேவாமிர்தம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜ்லீலா, நெல்லிக்காய்க்கு தண்ணீர் சேர்த்து வேக வைப்பதா,இல்லை ஆவியில் வைப்பதா?கடைகளில் ட்ரையாக கிடைக்கும் இனிப்பு நெல்லிக்காய்போல இருக்கும்தானே
அன்புடன் விம்லா.

டியர் விமலா மேடம்
எங்க மாமியார் இப்படிதான் செய்வார்கள், தேனில் கூட ஊறவைக்கலாம்.
எங்க மாமியார் தான் வித விதமாக ஊறுகாய் போடுவர்கள்,
எல்லாம் சீக்கிரம் காலியாகி விடும்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா என் அம்மா இது கூட உப்பும்,மிளகாய் பொடியும் சேர்த்துவார்கள்...என் பாட்டி தான் இதன் எக்ஸ்பேர்ட்..பழையதெல்லாம் மனதில் வந்து என்னவோ போல் ஆகிவிட்டது

ஜ்ஜ்ஜ்ஜலீலாக்கா...., ஆவியில் வேக வைப்பதா?,தண்ணீரில் வேகவைப்பதா? அதைச் சொல்லாம,ம்ம்ம்ம்ம்ம்..........!தேனில் ஊறவைப்பது பற்றிஉய்ம் தெளிவாக சொல்லுங்கள் நெல்லிக்காயை வாஙகி வைத்துக்கொண்டு,ரெசிப்பிக்காக வெயிட்பண்ணரேன்...........
அன்புடன் விமலா.

விமலா மேடம் ரொம்ப சாரி இத நான் இப்ப தான் பார்த்தேன், நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து தான் போடனும்.இல்லை யெனால் வெளியிலும் வேகவிடலாம்.
தேன் என்றால் நிறைய தேவை படும்,வேண்டுமென்றால் வெல்ல பாகு காய்ச்சி கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலீலா!
செய்துவிட்டு பிறகு சொல்கிறேன்!
மீண்டூ நன்றி.....
அன்புடன் விமலா.

YAENUNGA NELLIKAYA VEGAVACHA SATHU IRUKKUMA?

YAENUNGA NELLIKAYA VEGAVACHA SATHU IRUKKUMA?

Jaleela அக்கா உங்கள் நெல்லிக்காய் receipe பார்த்து எனக்கு அம்மா ஞாபகம் வந்துச்சு,
நான் school போகும்போது எங்க அம்மா செய்து தருவாங்க எங்க அம்மா வெல்ல பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காய் வேக வைப்பார்கள்.இது healthக்கு ரொம்ப நல்லது
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அக்கா உங்களுக்கு என்னுடைய LATE BIRTHDAY WISHES,நான் BIRTHDAY அன்ரே அனுப்பினேன் BUT என்னுடைய BIRTHDAY WISH வரலை.SORRY FOR THE LATE WISHES.
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

இனிப்பு நெல்லிக்காய்.

வெந்தால் சத்து போகாது நான் மைக்க்ரோவேவில் தான் வேக வைத்தேன் ரொம்ப நல்ல இருந்தது.
வேண்டுமானால் வெந்ததும் அந்த தண்ணீரிலேயே சர்க்கரை பாகு கச்சி கொள்ளுங்கள்.
நான் கொட்டையை எடுக்க வில்லை அப்படியே நலா பக்கமும் கீறல் போட்டு தான் வேக வைத்தேன். ரொம்ப நல்ல இருந்தது. நெல்லிக்காய் நிறைய இருந்தால் ஊறுகாய் கூட போடலாம். ரெஸிபி சிறிய திருத்தம் செய்துள்ளேன்.

ஜலீலா

Jaleelakamal

இனிப்பு நெல்லிக்காய்.
ரிஜ்வானா உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, வெல்லபாகில் நல்ல இருக்குமே, தேன் அதை விட ரொம்ப நல்லது.
என்ன அம்மா ஞாபகாமா நாம் ஒவ்வொரு அயிட்டம் செய்யும் போது அது தானா வந்துவிடும். நம்ம அம்மா இப்படி செய்து கொடுத்தார்கலே, எப்படி எல்லாம் கவனித்தார்கள். கடந்த காலத்தை நினைத்து சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியது தான். அந்த லைஃப் நினைத்தாலும் திரும்ப வாராது.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா பெரிசா ஒரு நெல்லிக்கா இருக்குல்ல அதுல பன்னலாமா(கூஸ்பெரி)

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா