நெல்லிக்காய் என்றதும் எல்லோருக்கும் ஸ்கூல் ஞாபகம் தான் வரும் ஊரில் ஸ்கூல் வாசலில் பெரிய நெல்லிக்காய் ,அரை நெல்லிக்காய், இலந்தை பழம் நாவல் பழம் விற்பார்கள். இந்த நெல்லிக்காய் நல்ல சத்தானதும், புத்துணர்வும் தரும்.
தேவையானப் பொருட்கள்
- நெல்லிக்காய் - பத்து
- சர்க்கரை - அரை கப்
- உப்பு - ஒரு பின்ச்
செய்முறை
- சர்க்கரையை அரைகப் தண்னீர் ஊற்றி பாகு கய்ச்சி ஆற வைக்கவும்.
- நெல்லிக்காயை நான்காக அரிந்து கொட்டையை நீக்கி விட்டு அதை குக்கரில் , உப்பு ஒரு பின்ச் போட்டு இரண்டு விசில் விட்டுஇறக்க வேண்டும்.
- பிறகு தயாரித்து வைத்துள்ள ஜீராவில் போட்டு நல்ல ஊறவைத்து சாப்பிடவும்.
- (அ) மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் நான்காக அரியாமல் நாலு பக்கமும் மாங்காய்க்கு கீறுவது போல் கீறி ஒரு பின்ச் உப்பு போட்டு வேகவைத்து இருக்கி சர்க்கரை பாகு (அ) வெல்லபாகு (அ) தேனில் நன்குஊற வைத்து சாப்பிட வேண்டும்
-
-
-
-
-
குறிப்பு
ஆகா சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை. குழந்தைகள் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.
கர்பிணி பெண்களுக்கோ அது தேவாமிர்தம்.