மாங்காய் பச்சடி

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - ஒன்று
தாளிக்க:
நல்லெண்ணெய் - மூன்று மேசைக்கரன்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
பச்சை மிளாகாய் - நான்கு
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
வெல்லம் - இரன்டு தேக்கரண்டி
வெந்த பொடி - கால் தேக்கரண்டி (வறுத்து பொடித்தது)
உப்பு - சிறிது


 

மாங்காயை தோலை நீக்கி விட்டு பூந்துருவலாக துருவிக் கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு நல்ல வதக்கவும்.
அது நல்ல வாசனை வரும் பிறகு வெந்தய பொடி, பெருங்காய பொடி போட்டு துருவிய மாங்காயை போட்டு நல்ல கிளறி இறக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்து சாப்பிடவும்.
எங்க வீட்டில் போட்டு வைக்க, செய்த அன்றே காலி மிளகாயை விட பச்சை மிளகாய் ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.


கர்ப்பிணி பெண்கள் இதை செய்து சாப்பிட்டால் வாய்க்கு ருசியா இருக்கும். புளிப்பு, கசப்பு, இனிப்பு, காரம் நிறைந்தது

மேலும் சில குறிப்புகள்