ராகி கொழுக்கட்டை

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராகி மாவு -- 200 கிராம்
தேங்காய் துருவியது -- ஒரு மூடி
சர்க்கரை -- 100 கிராம்
நெய் -- 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -- 1/4 ஸ்பூன்


 

முதலில் கேப்பை மாவை தண்ணீர் சேர்த்து புட்டுக்கு பிரட்டுவது போல் பிரட்டி ஜல்லடையில் சலிக்கவும்.
அதை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்தபின் அதை பெரிய தட்டில் கொட்டி துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், எலுமிச்சை சாறு இவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொழுகட்டைகளாக பிடித்து மீண்டும் எண்ணைய் தடவிய தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
ராகி கொழுக்கட்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்