பாசி பருப்பு கொழுக்கட்டை

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி -- 200 கிராம்
வெல்லம் -- 100 கிராம்
பாசி பருப்பு -- 50 கிராம்
நெய் -- 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் -- 2 என்னம் (பொடியாக்கியது)


 

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மை போல கெட்டியாக அரைக்கவும்.
வெல்லத்தை பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
பாசி பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து , ரவை போல பொடிக்கவும்.
அரிசி மாவுடன், வெல்லப்பாகு, பொடித்த பாசி பருப்பு, நெய், ஏலப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொழுகட்டையாக பிடித்து எண்ணைய் தடவிய இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான ருசியுடன் கொழுகட்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
சுபா எப்படி இப்படி. கண் திருஷ்டி உங்களுக்குத்தான் படப்போகிறது. வாழ்த்துக்கள், வழ்த்துக்கள். கொழுக்கட்டை ஆட்டி செய்வது ருச்சிதான். ஆனால் ஆட்டிய மாவிலுள்ள தண்ணீர், வெல்லப்பாகிலுள்ள தண்ணீர் இரண்டும் சேர்ந்தால் கொலுக்கட்டை புடிக்கவே வராதே. அதற்கு என்ன செய்ய வேண்டும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி மேடம்,
கொழுக்கட்டை மாவுக்கு ஆட்டி பிடிப்பது போல் சுவை இங்கே எங்கும் மற்ற மாவில்
வராது..
மாவை மிகவும் குறைவான தண்ணீரில் ஆட்டி 25 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைத்து நீங்கள் உடனடியாக பாசி பருப்பை போட்டு பின் வெல்லத்தை சேர்த்தால் பிடிக்கலாம்.
நீங்கள் சொன்னதன் பின்னால் தான் அம்மாவிடம் போன் பண்ணி இந்த ப்ராப்ளத்தை பற்றி கேட்டேன்...
அவர்கள் ஈரத்துணியில் 1 மணி நேரம் வைப்பார்களாம்...
அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சூடாக ஊற்றாமல் ஆறியபின் தான் யூஸ் பண்ணுவார்களாம்...
நான் இங்கே பச்சரிசிமாவில் யூஸ் பண்ணினேன் நன்றாக வந்தது...
ட்ரை பண்ணிப் பாருங்களேன்..

sarawathi madam

give me your email id
i want some tips from u.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

எனக்கு இமெயில் ஐடி இல்லை. என் கணவரது இமெயில் ஐடி கொடுக்கிறேன். thirugnanabl@yahoo.co.in
என்னுடைய ரெசிப்பிக்கு கீழேயே உங்கள் சந்தேகத்தை தெரிவித்தாலே உங்களுக்கு கட்டாயம் பதில் கிடைக்கும்.
நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி மேடம், சுபா ஆட்டி பிடிப்பது தான் ருசி அதிகம், இதில் பாதியை கட்டியாக ஆட்டி கொள்ளனும்,பாதியை ரைஸ் பவுடர் சேர்க்கனும், வெல்லத்தில் உள்ள மண் போகதான் அதை லேசாக கொஞ்சமா தண்ணீரில் சூடு படுத்தி வடிகட்டி ஆறவைத்து ஊற்றனும்.பிறகு, பாசி பருப்பு, தேங்காய், ஏலம் சேர்க்கனும் சேர்த்து பிசைந்து வைத்து சிறிது நேரம் கழித்து பிடித்தால் கெட்டியாக வரும், ஒரு சொட்டு நெய்யும் சேர்க்கலம், இட்லி தட்டில் ஈர துணியை விரித்து கொழுகட்டைகளை பிட்க்கனும்.
குறிக்கிட்டதற்கு மன்னிக்கவும். சுபா
ஜலீலா

Jaleelakamal